திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில், திருத்தேர் உற்சவம் வரும் 28ம் தேதி நடக்கிறது.திண்டிவனம் மரகதாம்பிகை உடனாகிய திந்திரிணீஸ்வரர் கோவில், பிரம்மோற்சவ விழா, நாளை (20ம் தேதி) காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து கோவிலில் காலை மற்றும் மாலை திந்திரிணீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து வரும் 27ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மறுநாள் காலை 7:40 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. இதில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.