பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
02:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்கி, இம்மாதம், 30ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம், 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நிகழ்ச்சி நிரல்:
தேதி நேரம் வாகனம்
ஏப்., 20 காலை 6:00- - 7:00 கொடியேற்றம்
இரவு -- ௭:௦௦ கேடய உலா
21 காலை, 9:30 வெள்ளி சூர்யபிரபை
இரவு, 7:00 பூத வாகனம்
22 காலை, 9:30 சிம்ம வாகனம்
இரவு, 7:00 ஆட்டுக்கிடாய் வாகனம்
23 காலை, 9:30 பல்லக்கு சேவை
இரவு, 7:00 வெள்ளி நாக வாகனம்
24 காலை, 9:30 அன்ன வாகனம்
இரவு, 7:00 வெள்ளி மயில் வாகனம்
25 மாலை, 4:30 புலி வாகனம்
இரவு, 7:00 யானை வாகனம்
26 இரவு, 7:00 தேர்
27 காலை, 9:30 யாளி வாகனம்
இரவு, 7:00 குதிரை வாகனம்
இரவு, 8:00 தெய்வானை திருக்கல்யாணம்
28 காலை, 6:00 கேடய உலா
மாலை, 5:00 கதம்பப் பொடி விழா
இரவு, 8:00 சண்முகர் உற்சவம்
29 காலை, 5:00 தீர்த்தவாரி சண்முக சுவாமி உற்சவம்
மாலை, 5:00 கேடயம், உற்சவர் அபிஷேகம்
இரவு கொடி இறக்கம்
30 மாலை, 4:00 சப்தாபரணம்.