பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
02:04
ஊத்துக்கோட்டை : பக்தர்கள் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட பழமை வாய்ந்த பார்வதி தேவி திட்டி அம்மன் கோவிலில், இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ளது, பார்வதி தேவி திட்டி அம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலை சீரமைக்கும் பணிகள் நடந்தன. பணிகள் முடிந்த நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, காலை, 11:00 மணிக்கு புதிய சுவாமி சிலைகள், கரிக்கோலம் வருதல், பிம்பங்கள் கண் திறத்தல் மற்றும் பரிவாரங்கள் பிரதிஷ்டை செய்தல் ஆகியவை நடைபெற்றன. மாலை, 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன பூஜை மற்றும் சாற்றுதல், பூர்ணாஹூதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை, 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.