பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
02:04
திருவள்ளூர் : ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், இன்று, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருவள்ளூர் அடுத்த, கடம்பத்துார், உசேநகரத்தில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, நேற்று, கலச ஆவாஹனத்துடன் துவங்கியது. பகல், 12:00 மணிக்கு தீப ஆரத்தி நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வியும், தீப ஆராதனையும் நடந்தது. இன்று, காலை, 5:00 மணிக்கு, 3ம் கால பூஜை யாக வேள்வி தத்துவர்சனை, காலை, 6:00 மணிக்கு கலசகுடம் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து, 7:00 மணியளவில், மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.