திருப்பரங்குன்றம் : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளுடன் ஏப்., 26 புறப்பாடுகிறார். ஏப்., 27 அதிகாலை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்கிறார். மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சித்திரை வீதிகளில் பட்டின பிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும். இரவு மாசி வீதிகளில் மீனாட்சி பூப்பல்லக்கு உலா வரும். இதில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையும் வலம் வருவர். பெற்றோர் திருக்கல்யாணத்தை முடித்து மே 1 மதுரையில் விடைபெற்று சுப்பிரமணியசுவாமி திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவார்.