பரமக்குடி : பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயிலில் வீதியுலா நடந்து வருகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறார். முக்கிய நிகழ்வாக ஏப். 25ல் திக்விஜயம், ஏப். 27ல் திருக்கல்யாண உற்ஸவம், மறுநாள் சித்திரைத் தேரோட்டம் நடக்கவுள்ளது.