பதிவு செய்த நாள்
23
ஏப்
2018
02:04
நாமக்கல்: மோகனூர், கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில், புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், பல ஆண்டுகளாக தேர் இல்லாமல் இருந்தது. பக்தர்கள் ஒன்று கூடி தேர் செய்ய முடிவு செய்து, 32 அடி உயரம் கொண்ட புதிய தேர், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டது. நேற்று தேர் வெள்ளோட்டம் விட முடிவு செய்யப்பட்டு காலை, 8:00 மணிக்கு, நாமக்கல் எம்.பி., சுந்தரம் தலைமை வகித்து, புதிய தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, கோவில் முன் நிலையடைந்தது. மோகனூர் இன்ஸ்பெக்டர் சுகுமார், செயல் அலுவலர் சாந்தி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.