பசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2018 02:04
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, அச்செட்டிப்பள்ளி கிராமத்தில், பழமையான பசவேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், புனரமைப்பு செய்யப்பட்டு, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு, சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில், அச்செட்டிப்பள்ளி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.