குன்னுார்;குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர் திருவிழாவில், குன்னுார் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் சார்பில், 56வது ஆண்டு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, நகராட்சி அலுவலகத்தில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, நேர்த்திகடன் செலுத்தி கலச ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மன் புஷ்ப பல்லக்கு ஊர்வலம், இன்னிசை கச்சேரி, வாண வேடிக்கை ஆகியவை நடந்தன.