பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
01:04
திருவள்ளூர்: குண்ணவலம் தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவிலில், மகாபாரத அக்னி வசந்த பெருவிழா, வரும், 27ல் துவங்கி, மே, 7 வரை நடைபெறுகிறது. திருவள்ளூர் அடுத்த, குண்ணவலம் கிராமத்தில், தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், மகாபாரத அக்னி வசந்த பெருவிழா, வரும், 27ம் தேதி, காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, யாக பூஜையுடன், மூலவர் அபிஷேகமும் நடைபெறும். தினமும், பிற்பகல், 2:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவு தொடர்ந்து, 10 நாட்களுக்கும் நடைபெறும். இரவு அம்மன் விசஷே அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறுகிறது. மே, 6ம் தேதி மாலை, தீமிதி விழாவும், இரவு, திரவுபதி அம்மன் வீதியுலாவும், மறுநாள் கொடியிறக்கம் செய்து, தர்மராஜா பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.