கீழக்கரை, திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலுடன் இணைந்த சன்னதியில் பட்டாபிஷேக ராமர் சமேத சீதா பிராட்டியார், பரதன், சத்துருக்கனன், லட்சுமணர், ஆஞ்சநேயர் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் சைத்ரோத்ஸவ உற்ஸவம் நடக்கும். நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு பட்டாபிஷேக ராமர் சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. உற்சமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கோஷ்டி பாராயணம் நடந்தது. மாலையில் சூரியப்பிரபை வாகனத்தில் நான்கு வீதிகளிலும் சுவாமி வீதியுலா நடந்தது. ஏப். 27 இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணமும், ஏப். 30 அன்று காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறும்.