பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
02:04
அந்தியூர்: ராமானுஜரின், 1,001வது திரு அவதார தினத்தை முன்னிட்டு, அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில், நவ கருட சேவை, இரண்டாவது ஆண்டாக நடந்தது. இதில் ஒன்பது கருட சேவைகளாக, அந்தியூர் கோட்டை அழகுராஜ பெருமாள், திருப்பதி பெருமாள், தவிட்டுப்பாளையம் வரதராஜ பேட்டைபெருமாள், சீனிவாச பெருமாள், ஜி.எஸ்.காலனி வரதராஜ பெருமாள், மைலம்பாடி சுதர்சன மடம் சீனிவாச பெருமாள், புரசைக்காட்டூர் கரியப்பெருமாள், வெடிக்காரன்பாளையம் லட்சுமி நாராயண பெருமாள், பெருமுகைப்புதூர் சஞ்சீவராய பெருமாள் ஆகிய சுவாமிகள் கருட வாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டன. அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலில் தொடங்கிய ஊர்வலம், பேட்டைபெருமாள் கோவிலில் நிறைவடைந்தது. அந்தியூர், தவிட்டுப்பாளையம், மைலம்பாடி, புரசைக்காட்டூர், அத்தாணி பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள், கலந்து கொண்டனர்.