பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
02:04
பந்தலுார்;பந்தலுார் அருகே உப்பட்டி காட்டிகுன்னு பகுதியில் கூத்தாண்டவர் ஆலய திருவிழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில், பூஜையும், குத்துவிளக்கேற்றி, கொடியேற்றல் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், அய்யன் கூத்தாண்டவரின் கண் திறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, நீலகிரி மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவி நிஷா, துணை தலைவி பதுருநிஷா ஆகியோர் தலைமையில் திருநங்கைகளுக்கான கூத்தாண்டவர் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, திருநங்கையர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடந்தது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், காலை சிறப்பு அலங்கார ஆராதனைகளும், திருநங்கை கார்த்திகா தலைமையில் கூத்தாண்டவரின் வரலாறு பாடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து களபலி பூஜையும், கூத்தாண்டவர் திருநங்கைகளின் தாலி அறுப்பு நிகழ்ச்சி, ஒப்பாரி பாட்டும் நடந்தது. பின்பு, ஆராதனை பூஜையுடன் திருவிழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் ஆசை தலைமையில், நிர்வாகிகள், கமிட்டியினர், திருநங்கைகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.