பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
02:04
கொடுமுடி: சிவகிரியில் பழமை வாய்ந்த, வேலாயுத சுவாமி கோவிலில், சித்ரா பவுர்ணமி தினத்தில், தேர்த்திருவிழா நடக்கிறது. வரும், 29ல் விழா நடக்கவுள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம், கொடியேற்றம் நடந்தது. 29ல் காலை, திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து, வேலாயுதசுவாமி வள்ளி தெய்வானையுடன், பெரிய தேருக்கு எழுந்தருளுகிறார். விநாயகர் சிறிய தேருக்கு எழுந்தருளுகிறார். காலை, 9:30 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்படுகிறது. ஏப்.,30ல் மாலை தேர் நிலை சேர்கிறது. மே,1ல் அதிகாலை கோமாதா பூஜை, இரவில் பரிவேட்டை நிகழ்ச்சி; மே, 2ல் சத்தாவரம் நிகழ்ச்சி, விடையாத்தி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.