பரமக்குடி, பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஏப்.19ல் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 11:00 மணிக்கு ஈஸ்வரன் கோயிலில், சந்திரசேகரசுவாமி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மதியம் 12:30 மணிக்கு கோயில் மணமேடையில் ஊஞ்சல் சேவையில் விசாலாட்சி அம்மனுக்கும் - சந்திரசேகரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. *இதே போல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாலை 6:00 மணிக்கு சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மேல் மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் வீதியுலா வந்தனர்.