மானாமதுரையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய வீர அழகர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2018 10:04
மானாமதுரை
ஆனந்தவள்ளி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வெண்பட்டு
உடுத்திஅழகர் ஆற்றில் இறங்கினார்.இதில் ஏராளமான பக்தர்கள்
கலந்துகொண்டார்கள்.
மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயில் சித்திரை
விழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் வீரஅழகர் இறங்குதல் காலை இன்று
காலை குதிரை வாகனத்தில் புறப்பட்ட வீரஅழகருக்கு ஆனந்தவல்லி- சோமநாதர்
ஆலயத்தின் முன்புறம் வெண்கொற்ற குடை பிடித்து வரவேற்பளிக்கப்பட்டது. கோயில்
முன் புறம் வைகை ஆற்றில் வெண்பட்டு உடுத்தி ‘கோவிந்தா’ கோஷங்களுக்கு இடையே
வீரஅழகர் இறங்கினார். விரதமிருந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து
வீரஅழகரை குளிர்வித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.