திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2018 01:04
திருப்புத்துார்;திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்ஸவத்தை முன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஏப்..20ல் கொடியேற்றத்துடன் 12 நாள் பிரமோற்ஸவம் துவங்கியது. நேற்று முன்தினம் தேருக்கு அலங்காரம் துவங்கியது. காலை 8:00 மணிக்கு பெருமாள் தேரில் எழந்தருளினார்.தொடர்ந்து பக்தர்கள்அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:25 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இன்று பிரணயகலகம்,புஷ்பயாகம் வாசித்தலும், நாளை இரவில்புஷ்பப்பல்லக்கில் புறப்பாடுடன் பிரமோற்ஸவம் நிறைவடையும்.