பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், நேற்று முன்தினம் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணியளவில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்து, 9:00 மணியளவில் தேரோட்டம் நடந்தது. பவானி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேரை, பவானி சிவனடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் என பலரும் மேளதாளங்கள் முழங்கிட வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.