ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2018 01:05
ஆண்டிபட்டி : ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில் சித்திரை திருவிழா விழா ஏப். 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் விழாவில் சுவாமி அன்ன, சிம்ம, ஆஞ்சநேயர், கருட, ஆதிசேஷன், கஜேந்திர வாகனங்களில் கோயில் வளாகத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். 7 ம் நாள் திருக்கல்யாணம் நடந்தது. 9 ம்நாள் விழாவில் கதலிநரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் ’கோவிந்தா’ கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். பாதி வழியில் நிலைநிறுத்தப்பட்ட தேர் இன்று(மே 1) மாலை மீண்டும் இழுக்கப்பட்டு நிலைக்கு வந்து சேரும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் அருள்செல்வன், தக்கார் சந்திரசேகரன் மேற்பார்வையில் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.