பெருந்துறை: மேட்டுக்கடை அருகே, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பெருந்துறை அடுத்த, மேட்டுக்கடை, வேப்பம்பாளையம் கிராமம், கல்யாண மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. நேற்று முன்தினம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமும், இரண்டு கால யாக பூஜைகளும் நடந்தன. சிவராம சிவாச்சாரியார், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார்.