பதிவு செய்த நாள்
05
மே
2018
01:05
சேலம்: விநாயகர், முருகனுடன், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே, மாரியம்மன், பிடாரியம்மன், விநாயகர் கோவில் உள்ளது. அங்கு, கடந்த, 24 முதல், சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில், பால், இளநீர், குங்குமம், விபூதியால், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு ராஜ அலங்காரம் சாத்தப்பட்டு, விநாயகர், முருகனை மடியில் வைத்திருப்பது போன்று அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர். தீர்த்தக்குட ஊர்வலம்: மகுடஞ்சாவடி, வைகுந்தம் அருகே, கருமனூர் கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 7ல் நடக்கவுள்ளது. அதற்காக, இடைப்பாடி, வெள்ளரிவெள்ளி பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள், நேற்று, பூலாம்பட்டி காவிரியாற்றில் தீர்த்தக்குடங்களை எடுத்து, கோவிலுக்கு சென்றனர். தேர் பவனி: ஏற்காடு, லாங்கில்பேட்டை, ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவிலின், 151ம் ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, தேர்பவனி நடந்தது. லாங்கில்பேட்டையில் துவங்கி, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், சாட்டை சமயபுர மாரியம்மன் கோவில், ஜெரீனா நகர், பெரிய மாரியம்மன் கோவில் வழியாக, கோவிலை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.