சாயல்குடி: சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் இ.சி.ஆர்., ரோட்டிற்கு சற்று தொலைவில் இடிபாடுகளுடன் பழமையான சித்துச்செங்கல் காம்பவுண்ட் சுவற்றிற்குள், திறந்த வெளியில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இதன் அருகே ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான அன்னச்சத்திரம் அமைந்துள்ளது. வடக்குப்பகுதியில் பழமையான தெப்பக்குள ஊரணி உள்ளது. சிவன்கோயில் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமான காணப்படுகின்றன. தொல்லியல் துறையினர், கோயில் அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்தால், ஏராளமான அரிய தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது.