திருவெற்றியூர் கோயில் வளாகத்தில் தேங்கிய தீர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2018 11:05
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளி, செவ்வாய்நாட்களிலும் சித்திரை,ஆடியில் நடைபெறும் விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இக்கோயிலில் உள்ள தீர்த்த தொட்டியில் தீர்த்தம்நிறைந்து வெளியே செல்ல முடியாத வகையில் உள்ளது.பக்தர்கள் கூறுகையில்-கோயிலை சுற்றி வரும் போது தீர்த்தம் காலில் மிதிபடுகிறது.பாலிதீன் பை ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. தீர்த்தத்தை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தேவஸ்தானஅலுவலர்கள் கூறுகையில்- தீர்த்தம் கண்மாய்க்குள் செல்லும்வகையில் அமைக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த சிலர் குழாயைஅடைத்து விட்டனர் இதனால் தொட்டி நிறையும் போது தொழிலாளர்கள் மூலம் வாளி களில் எடுத்து வெளியே கொட்டப்படுகிறது என்றனர்.