நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் 54 மூலிகை யால் செய்யப்பட்ட 108 கிலோ பசு திருநீறு அபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சிவனடியார்களால் சிவ வேள்விகள் ஆரம்பிக்கப் பட்டது. 10:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரி, ராஜராஜேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 10:30 மணிக்கு ராஜராஜேஸ்வரருக்கு 108 கிலோ பசு திருநீறால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம்1:00 மணிக்கு 108 ேஹாம திரவியங்கள் கொட்டப்பட்டு சிவ வேள்விகள் நிறைவு பெற்றது. பின்னர் வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு கலசஸ்தாபனம் செய்து மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.