சிவபெருமான் தனது இருப்பிடமாகக் கயிலாயத்தைக் கொண்டிருக்கிறார். அதனால்தான் கயிலயத்துக்கு மதிப்பு. திருமால் வைகுண்டத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டிருக்கிறார். அதனால் தான் வைகுண்டத்துக்கு மதிப்பு. ராமர் இருக்குமிடம் அயோத்தி. அயோத்திக்கு மதிப்பு ராமரால்தான். கடலோடு சேர்ந்திருப்பதால்தான் அலைக்கு மதிப்பு. அதுபோல், பகவானைத் தன் இதயத்தில் வைத்திருப்பதால்தான் பக்ததனுக்கு மதிப்பு.