பதிவு செய்த நாள்
08
மே
2018
01:05
கோத்தகிரி;கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கேரள ரத ஊர்வலம் நடந்தது. கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா, கடந்த மாதம், 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, கேரள ரத ஊர்வலம் நேற்று நடந்தது.
காலை, 9:00 மணிக்கு, டானிங்டன்விநாயகர் மற்றும் கருமாரியம்மன் கோவிலில் இருந்து, சிங்காரி மேளம், செண்டை வாத்தியம், பேண்டு வாத்தியம் முழங்க, பூக்காவடி, மற்றும் கர்நாடக கலைஞர்களின் சுவாமி அவதாரம் நடனத்துடன், காமராஜர் சதுக்கம், ராம்சந்த், பஸ் ஸ்டாண்ட் வழியாக, கடைவீதி மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு, அம்மனுக்கு, அபிஷேக அலங்கார மலர் வழிபாடு நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, கடைவீதி மாரியம்மன் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மனின் கேரள ரதம், ஆர்.கே.சி., லைன், காம்பாய் கடை, பஸ் ஸ்டாண்ட், காமராஜ் சதுக்கம் மற்றும் ராம்சந்த் வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. இரவு, 9:00 மணிக்கு, கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.