பதிவு செய்த நாள்
08
மே
2018
01:05
ஓசூர்: சூளகிரியில் உள்ள, சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபி?ஷக விழாவில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள, பேரிகை சாலையில், பழமையான சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், ஊர் பொதுமக்கள் சார்பில் புனரமைப்பு செய்யப்பட்டு, கர்நாடக மாநிலம், சிவாரிப்பட்டணம் பகுதியில் இருந்து, சீதா, ராம, ஆஞ்சநேய சுவாமி சிலைகள் கொண்டு வரப்பட்டு, 48 நாட்கள் தண்ணீர் தொட்டியில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு மகா கணபதி பூஜை, கங்கா பூஜை நடத்தப்பட்டு, இரவு, 9:00 மணிக்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோமாதா பூஜை, 8:00 மணிக்கு கணபதி பூஜை, வேதபாராயணம், கலசஸ்தாபனம், கண மாரியம்மன் கோவில் திருவிழா: செண்டை மேளத்துடன் ரத ஊர்வலம் :செண்டை மேளத்துடன் ரத ஊர்வலம்பதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தன. அதைத் தொடர்ந்து காலை, 11:30 மணிக்கு, கோவில் விமானத்திற்கு கும்பாபி?ஷகம் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.