பதிவு செய்த நாள்
08
மே
2018
01:05
பழநி: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் புனிதநகரமாக அறிவிக்க வலியுறுத்தி, பழநியில் இருந்து சென்னைக்கு நடைப்பயணம் புறப்பட்டது.’முருகனின் ஆறுபடை வீடுகளை புனிதநகரமாக அறிவிக்க வேண்டும், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தி தமிழ்நாடு தெய்வீக தமிழ்ப்புரட்சி பாசறை சார்பில் பழநி பாதவிநாயகர் கோயிலில் இருந்து சென்னைக்கு நடைப்பயணம் புறப்பட்டது.மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமனுஜர் ஜீயர் துவக்கி வைத்தார். புலிப்பாணி சிவானந்த பாத்திர சுவாமிகள், பாசறை நிறுவனர் ஆதிமனகோபால் பங்கேற்றனர்.ஆதிமதன கோபால் கூறுகையில், ”நேர்மை யான அரசியல், உண்மையான ஆன்மிகம் உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு கோடி பக்தர்களிடம் கையெழுத்து வாங்குகிறோம். துறவிகள், மடாதிபதிகள், இந்துஅமைப்புகள் இணைந்து திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், கடலுார், சுவாமிமலை என 1000 கி.மீ., நடைபயணம் செல்கிறோம். ஜூன் 1ல் சென்னையில் கவர்னரிடம் மனுஅளிக்க உள்ளோம்” என்றார்.