தைத்ரிய உபநிஷத் உலக உயிர்களை இரண்டாகப் பிரிக்கிறது. ‘கடவுள் இருக்கிறார். அவருக்கு நாமெல்லாம் அடியவர்கள்’ என்ற எண்ணம் படைத்தவர்கள் முதல் பிரிவினர். இவர்களை ‘ஸத்’ வகையினர் என்பர். மனிதர்கள் மட்டுமில்லாமல், அரக்கர்களிலும் நல்ல குணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு நேர் எதிரானவர்கள் ‘அஸத்’ என்னும் இரண்டாவது பிரிவினர். கடவுளை மறுப்பதோடு, தானே உயர்ந்தவன் என்ற எண்ணமும் கொண்டவர்கள் இவர்கள். இரண்யனுக்கு பிள்ளையான பிரகலாதன், அரக்க குலத்தில் பிறந்தாலும் விஷ்ணு பக்தனாக விளங்கினான். அவனுக்கு நரசிம்மர் அருள்பாலித்தார்.