ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேச பெருமாள் கோவிலில் துாய்மை பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2025 03:11
ஸ்ரீபெரும்புதுார்: சென்னை, மதுரை வழக்கறிஞர்கள் சார்பில், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், துாய்மை பணி நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்துாரில் ஆதிகேச பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, வைணவ மகான் ராமானுஜர் தானுகந்து திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வழக்கறிஞர்கள் சார்பில், நேற்று கோவிலை சுத்தம் செய்யும் பணி நடந்தது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று, கோவில் முழுதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.