அலங்காநல்லுார், அலங்காநல்லுார் அருகே கொண்டையம்பட்டி தில்லை காளியம்மன் கோயிலில் வளைகாப்பு திருவிழா நடந்தது. பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தனர். நவதானிய களி உள்ளிட்ட 36 வகை உணவு படையல்கள், வண்ண வளையல்கள், சேலைகள் வைத்து உலக நன்மைக்காவும், மழைவேண்டியும் அம்மனுக்கு சிறப்பு வளைகாப்பு பூஜை நடந்தது. பின் சக்தி கிடாய் வெட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹரிபகவான் அறக்கட்டளை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.