கரூர்: சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர், பசுபதிபாளையம் வடக்கு தெருவிலுள்ள சுயம்பு முத்து மாரியம்மன் கோவிலில், 13ம் ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 1ல் துவங்கியது. விழாவையொட்டி, நேற்று காலை, அமராவதி ஆற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி, பறவை காவடி எடுத்து வந்தனர். அலகு குத்திய பக்தர்களும் அவர்களுடன் பசுபதிபாளையம் பாலம் வழியே ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலிருந்து அமராவதி ஆற்றுக்கு கரகம் எடுத்து வருதல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நாளை நடக்கின்றன.