காந்திகிராமம் மாரியம்மன் கோவில் திருவிழா வரும் 13ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2018 12:05
கரூர்: கரூர் காந்திகிராமம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா, வரும் 13ல் கம்பம் போடுதலுடன் துவங்குகிறது. அன்று முதல் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 18ல் பூத்தட்டு, 20ல் வடிசோறு மாவிளக்கு, 21ல் அக்னிசட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் மாவிளக்கு என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 22ல் பால்குடம் எடுத்தல், மாலை அம்மன் திருவீதி உலா, 23ல் கம்பம் புறப்படுதல் ஆகியவை நடக்க உள்ளன. மேலும், அன்று மாலை, அம்மன் திருவீதி உலா நடக்கும். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.