குஜிலியம்பாறை, ஆர்.வெள்ளோடு பாலகுருசாமி கோயிலில் இளைஞர்கள் பங்கேற்கும் ’குமரித் திருவிழா’ நேற்று நடந்தது. ஆர்.வெள்ளோடு ஊராட்சி பாலகுருசாமி கோயிலில், சித்திரை மாதத்தைமுன்னிட்டு கோயில் திருவிழாவெகு விமரிசையாக நடந்தது. கோயில்சாட்டுதலுடன் துவங்கிய விழாவில்உற்றார், உறவினர்கள் கொடுமுடி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டுவந்தனர். அன்று இரவு வாணவேடிக்கையுடன்விழா துவங்கியது. விழாவில் மாட்டு வண்டிகள் சகிதமாக திரண்ட பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.பலர் நேர்த்திக் கடன் செலுத்தினர்.இரவு முழுவதும் ஆடல், பாடலுடன் நாடகமும் நடந்ததால் விழா களைகட்டியது. இந்த திருவிழாவில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள்திரளாக பங்கேற்று பொழுதை கழிப்பர். இதனால் இத்திருவிழா ’குமரித்திருவிழா’ என்றும் அழைக்கப்படுகிறது. நேற்றுஇரண்டாவது நாள் விழா நாடகத்துடன் முடிவு பெற்றது. கோயில் நிர்வாகி டி.பாலகுரு கூறுகையில், ”ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்புடன் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டும் நல்ல முறையில் நடந்தது’ என்றார்.