பதிவு செய்த நாள்
09
மே
2018
12:05
கம்பம், காமுகுல ஒக்கலிகர் (காப்பு) சிறையோர் குல தாயாதிகளின் குல தெய்வம் ரங்கநாதர் கோயில் ஓடைப்பட்டியில் உள்ளது. 20 ஆண்டுக்கு ஒரு முறை இங்கு நடக்கும் பெரியகும்பிடு திருவிழா , மே 5 முதல் 7 வரை நடந்தது. முதல் நாள் ரங்கநாதர் கோயிலில் திரண்டு தானமனைக்காரர்களை அழைத்து வருதல், பின்னர் கருப்பசாமி கோயிலில் தானமனைக்காரர்கள் குளித்து தீர்த்தம் எடுத்து வருதல், சுவாமி அபிேஷக ஆராதனை,கும்பிடு பிடித்தல் நடந்தது. பிறந்தவீட்டு பிள்ளைகள் விலுவைக்கூடைகளை சுமந்து கொண்டு கோயிலிற்கு வருதல், அவர்களுக்கு பிரசாதம் அளித்தல், பெரிய தனக்காரருடன் மாலைக்கோயிலிற்கு சென்று விளக்கு ஏற்றுதல் நடந்தது. மறுநாள் புகுந்தவீட்டு பிள்ளைகள் கோயிலில் கூடி பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கணக்கில் பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் மாடு மறித்தல், கும்பிடு வாங்குதல், பள்ளயம் பிரித்தல் நடந்தது. முன்னதாக இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த கோவை விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி, ஒக்கலிகர் சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி, மூன்றுமாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோரை சிறையோர்குல தாயாதிகளின் தலைவர் முன்னாள் எம்.பி., ஆர்.டி.கோபால் தலைமையில், செயலாளர் ஆர்.கருணாநிதி பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன், துணை தலைவர் கிருஷ்ணன், துணை செயலாளர் காந்தி, துணை பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் நந்தகோபால் வரவேற்றனர். இந் நிகழ்ச்சிகளில் ஆலோசனை குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் உமாபதி, குணசேகரன், கண்ணன், எம்.பி. பார்த்திபன், எம்.எல்.ஏ., ஜக்கையன், அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன். சுப்புராயர், ஏ.கே.எம்.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.