பதிவு செய்த நாள்
11
மே
2018
11:05
உடுமலை: உடுமலை, அருகே முக்கோணம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில், திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.உடுமலை அருகே, பெரிய பூலாங்கிணர், சின்னபூலாங்கிணர், ஆர்.கிருஷ்ணாபுரம், கென்னடிநகர், மில்கேட், என்.ஜி.ஆர் நகர், நாராயணசாமி நாயுடு நகர், ராஜிவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுவாக வணங்கப்படும் முத்தாலம்மன் கோவிலில், 8ம் தேதி முதல் திருவிழா நடக்கிறது.அந்தந்த கிராமங்களுக்குட்பட்ட விநாயகர் கோவில்களில், 8ம் தேதி இரவு முனி முத்தாலம்மன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, நேற்று முன்தினம், அம்மனுக்கு மக்கள் பட்டு சீர் எடுத்து வந்தனர். இரவு, 10:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், தொடர்ந்து, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, அதிகாலை, 4:30 மணியிலிருந்து, 5:00 மணி வரை, அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பொங்கல், முளைப்பாரி வழிபாடும், மாலையில், பக்தர்கள் பூவோடு எடுத்தும் வழிபட்டனர். இன்று, மஞ்சள் நீராடுதல் மற்றும் மகாஅபிேஷகம் நடக்கிறது.