கிள்ளை: கிள்ளை அடுத்த ராதாவிளாகம் உத்திராபசுபதியார் கோவிலில் கும்பாபிேஷகம் நடத்துவதற்காக நேற்று காலை பாலாலய நிகழ்ச்சி நடந்தது. இக்கோவில் கட்டியதில் இருந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா குழு அமைத்து கும்பாபிேஷகம் நடத்தி வருகின்றனர். தற்போது 48 வது ஆண்டில் 4வது முறையாக கும்பாபிேஷகம் நடத்திட அப்பகுதியினர் விழாக்குழுத் தலைவரான அப்பகுதியைச் சேர்ந்த மலரழகன் தலைமையில் உத்திராபதி, செல்வராஜ், தேவதாஸ், ராஜதுரை, மோகன், சுந்தரலிங்கம், கண்ணன், துரையரசன் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட குழு அமைத்து ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை 9:00 மணியில் இருந்து 10:30 மணிக்குகள் பாலாலய நிகழ்ச்சிக்காக கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகளை சிதம்பரம் குஞ்சிதபாதம் சைவாச்சாரியார் நடத்தி வைத்தார். பூஜையில் ராதாவிளாகம், உத்தமசோழமங்கலம் உள்ளிட்ட சுற்றுபகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்சிவ பக்தர்கள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். பணிகளை விரைவாக முடித்து வரும் அக்டோபர் மாதம் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக விழாக்குழுத் தலைவர் தெரிவித்தார்.