பதிவு செய்த நாள்
12
மே
2018
12:05
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள அமுதலிங்கேஸ்வரர் கோயில், ஆகம முறைப்படி, சிற்ப கலை வல்லுனர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இங்குள்ள நடராஜர் சிலை விசேஷமானது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ளது போன்று, வலது காலை தூக்கி நடனம் ஆடிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் உள்ள சித்திர குப்தர் விசேஷமானவர். சித்திர குப்தருக்கு தனிச் சன்னதி கொண்ட ஒரே சிவன்கோயில், அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் கோயில் ஆகும். இங்கு, உஷாதேவி சூரியன் பிரத்யுஷா தேவி, சரஸ்வதி, அகதீஸ்வரர், காசி விஸ்வநாதர் விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, அனவரத செல்வவிநாயகர், அன்னபூரணி, பஞ்சலிங்கம், அன்னாமலையார், சாந்த சரபேஸ்வரர், வள்ளி முத்துக்குமாரசாமி தெய்வானை, துர்க்காம்பிகை, மகா லட்சுமி, சனீஸ்வரர், பைரவர், நவக்கிரங்கள், ரோகிணி, சந்திரன், கார்த்திகை, ஆதி பாலச்சந்திர விநாயகர், அதிகார நந்தீஸ்வரர், வெள்ளை விநாயகர், வாகன நந்தீஸ்வரர், சிவசக்தி விநாயகர்கள், அனுமன், வரராஜ பெருமாள், பழனியாண்டவர், ஐயப்பன், வாழவந்தம்மன் தெய்வங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் விசேஷ தினங்களில் சிறப்பு அபிஷேக தீபாராதனைகள், பிரதோஷ வழிபாடு நடைபெறும். அன்னாபிஷேகம், 1008 சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சொக்கப் பனை தீபம், மகா தீபம் உட்பட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.