பதிவு செய்த நாள்
14
மே
2018
01:05
சென்னிமலை: சென்னிமலை காமாட்சியம் மனுக்கு, 505 குடங்களில் பாலாபிஷேகம் நடந்தது. சென்னிமலை, காமாட்சி அம்மன் கோவிலில், பொங்கல் விழா, வரும், 17ல் நடக்கிறது. கடந்த, 9ல் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை, பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சென்னிமலை ராஜ வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தது. ஆண்கள், பெண்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பால் குடம் சுமந்து சென்றனர். இதையடுத்து காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மாலை, கும்பம் பாலித்தல் நடக்கிறது. 16ல் காமட்சியம்மன் மாவிளக்குக்குடன், திருவீதிகளில் பவனி செல்கிறார். 17ல் காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைபவம் நடக்கிறது. அன்று மதியம், மேலப் பாளையம் மாதேஸ்வர நகரிலிருந்து அலகு தேர் ஊர்வலம், களத்துக்காட்டில் இருந்து மாவிளக்கு ஊர்வலம், கோவிலை வந்தடையும். 18ல் மஞ்சள் நீராட்டம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.