பதிவு செய்த நாள்
15
மே
2018
11:05
நாமக்கல்: நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா சித்திரை, வைகாசி மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், நூற்றுக்கணக்கான பக்தர்கள் மோகனூர் காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து காப்புக்கட்டுதல்; நேற்று, பூச்சாற்றுதல் நடந்தது. வரும், 20ல் மறுகாப்புக் கட்டுதல், 27ல் வடிசோறு மற்றும் மாவிளக்குப் பூஜை நடக்கிறது. வரும், 28 காலை, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா வருகிறார். மறுநாள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, இரவு வசந்த உற்சவம்; 30ல் மஞ்சள் நீர் உற்சவம்; 31ல் கம்பம் பிடுங்கி கமலாலய குளத்தில் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் சுதாகர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.