பதிவு செய்த நாள்
16
மே
2018
03:05
ப.வேலூர்: ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கிருத்திகை மற்றும் அமாவாசை தினத்தையொட்டி, கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகம் நடந்தது. ப.வேலூர் அடுத்த, கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில், விசேஷ பூஜைகள் நடந்தன. அதேபோல பாண்டமங்கலம் -கோப்பணம் பாளையம் சாலை, மாசாணியம்மன் கோவிலில், விநாயகர், முருகன், அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். வழக்கமாக நடைபெறும் சிறப்பு யாகம், மதியம், 12:30 மணியளவில் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், சுற்றுவட்டார பகுதி குலதெய்வ கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. அமாவாசையும், கிருத்திகையும் ஒரே தினத்தில் வந்ததால், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.