பதிவு செய்த நாள்
18
மே
2018
01:05
கண்டாச்சிபுரம்: முகையூர் மகிமை மாதா ஆலய பெருவிழாவில், ஆடம்பர தேர்பவனி நடந்தது. முகையூர் மகிமை மாதா ஆலயத்தில், கடந்த 9ம் தேதி துவங்கி நவநாட்கள் திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று காலை நடந்த சிறப்பு திருப்பலிகளுக்கு, முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமை தாங்கி நடத்தினார். பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் வழங்கப்பட்டது. இரவு கரகாட்டம், மான் ஆட்டம், ஒயிலாட்டம் உட்பட 9 வகையான நாட்டார் கலைகளுடன் மகிமை மாதா தேர்பவனி நடைபெற்றது. இதில் பங்குதந்தை ஹென்றி எழில்மாறன், பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி, உதவி பங்குதந்தை பால்ராஜ்மற்றும் சிறப்பு விருந்தினராக சிம்லா- சண்டிகர் மறைமாவட்ட ஆயர் இக் ஷியத் லயோலா ஐவன் மக்ர்னத் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஆயந்துார், இருதயபுரம்,கொடுங்கால், ஆற்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.