பதிவு செய்த நாள்
22
மே
2018
01:05
கோவை; காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா ரோடு, அனுமந்தராயன் கோவில் வீதியில் அமைந்துள்ளது, முத்துமாரியம்மன் கோவில். கோவிலில் 68ம் ஆண்டு குண்டம் திருவிழா, மே 15ல் துவங்கியது; தினமும் அம்மனுக்கு, சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று அம்மை அழைத்தல் மற்றும் கோனியம்மன் கோவிலில் இருந்து, சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது. மதியம், அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு, குண்டம் திறக்கப்படுகிறது. நாளை காலை, 11:00 மணிக்கு, கோனியம்மன் கோவிலில் இருந்து, கரகம் அழைத்து வரப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வரும் 24ம் தேதி மாலை, மாவிளக்கு ஊர்வலத்துடன் விழா நிறைவடைகிறது.