சித்தர், பூமியான கொல்லி மலையில் ‘அறப்பளீஸ்வரர்’ என்ற பெயரில் சிவபெருமான் அருளாட்சி செய்கிறார். அறநெறியைப் பின்பற்றிய சித்தர்களால் நிறுவப்பட்டதால் இவர் ‘அறப்பளீஸ்வரர்’ அம்பிகை அறம் வளர்த்த நாயகி. இக்கோயிலில் அம்பாள் சன்னதி எதிரே மேல் சுவரில் அஷ்டலட்சுமிகளுடன் ஸ்ரீசக்கர யந்திரம் உள்ளது. இவளது சன்னதியைச் சுற்றிலும் சித்தர்களின் யோகாசன முறைகள் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. சன்னதி விமானத்தில் சித்தர்களை சுதை வடிவமாக வடித்துள்ளனர்.