கோயில் விழாக்களில் பலவகையான இசை முழக்கங்கள் செய்யத்தக்கவை. இதற்கென பலவித இசைக்கருவிகள் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. இவற்றின் ஒலிகளை பஞ்சபூதங்களின் அடிப்படையில் ஐந்துவகையாக வாதுளாகமம் விளக்கிக் கூறுகிறது.
மேற்கண்ட சிவாகம வசனத்தால் சப்தங்கள் பஞ்சபூத விகாரங்களே என்பதை உணரலாம். மேலும், தினமும் சூரிய உதயகாலத்தில் பஞ்சமகா சப்தத்தைச் செய்ய வேண்டும் என்று சிவாகமங்கள் வலியுறுத்தியுள்ளன. இவ்விதம் அதிகாலை எழுப்பப்படும் ஐவகை ஒலிகளால் தேசத்தில் அசுபம் நீங்கிடும்; உயிரினங்களிடம் அறியாமை இருள் அகலும் என்று பயனும் கூறப்பட்டுள்ளது.