Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாக விரதமுறை! முருகப்பெருமான் அவ்வையாரிடம் கேட்ட கேள்விகள்! முருகப்பெருமான் அவ்வையாரிடம் கேட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகனுக்கு சமமானது எது?
எழுத்தின் அளவு:
முருகனுக்கு சமமானது எது?

பதிவு செய்த நாள்

25 மே
2018
03:05

முருகனுக்கு வேல் தான் அடையாளம். எல்லா தெய்வங்களும் ஆயுதம் ஏந்தி இருந்தாலும், வேலுக்கு தனிச்சிறப்புண்டு. முருகனே  தேவசேனாபதியாக பன்னிரண்டு கைகளில் பல ஆயுதங்களை வைத்திருந்தாலும் வேல் மட்டும் அவருக்கு சமமானதாகக்  கருதப்படுகிறது. அதற்கு சக்தி ஆயுதம் என்று பெயர். தமிழில் சக்திவேல் என்று குறிப்பிடுவர். இதனை தனியாக வைத்து வழிபடும்  வழக்கமும் உண்டு. முருகனின் வேலின் பெயரால் வேலாயுதம் என்று குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவர்.

பாம்பு கனவுக்கு தீர்வு:
ஆந்திரா, கர்நாடகா பகுதியில் முருகனுக்கு மனிதவடிவில் சிலை அமைப்பதில்லை. நாகப்பாம்பின் வடிவமாக  கருவறையில் எழுந்தருளச் செய்வர். சஷ்டி திதியன்று முருகன்கோயில்களில் நாகராஜா பூஜை நடத்துவர். கனவில் பாம்பு தோன்றினால்,  அதற்குப் பரிகாரமாக சுப்பிரமண்ய ப்ரீதி என்னும் பெயரில் புற்றுக்கு பால் விடும் வழக்கமும் உண்டு. பாம்பைக் கண்டால் ஸுப்பராயுடு  என்று முருகனின் பெயரால் குறிப்பிடுவர்.

தமிழ்க்குழந்தை: சீர்காழியில் பிறந்தவர் திருஞானசம்பந்தர். இவரை முருகனின் அவதாரமாகக் கூறுவர். தந்தையுடன் சென்ற  சிறுகுழந்தையான சம்பந்தர், குளக்கரையில் பசியால் அழுதார். அவரது அழுகையைப் பொறுக்காமல் அம்மையப்பர் காளை வாகனத்தில்  எழுந்தருளினர். அம்பிகையும் ஞானசம்பந்தரின் பசி நீங்க பாலூட்டினாள். இறையருளால் தோடுடைய செவியன் என்று தேவாரத்தைப்  பாடத் தொடங்கினார். ஆதிசங்கரரும் சவுந்தர்யலஹரியில் சம்பந்தரைப் பற்றி பாடியுள்ளார். பர்வதராஜனின் மகளான பார்வதிதாயே!  திராவிட சிசுவிற்கு (தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தருக்கு) பாலை வழங்கினாய். அதன் சிறப்பால் அக்குழந்தை பாடும் திறன் பெற்று  எல்லோரையும் கவர்ந்தது, என்று குறிப்பிடுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar