பதிவு செய்த நாள்
26
மே
2018
12:05
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சூரன்கோட்டை சோனையா கோயில் கும்பாபிஷேகம், நாளை (மே27) நடக்கவுள்ளது.சூரன்கோட்டை ஊராட்சி சோனையா, கருப்பணசாமி, காமாட்சி அம்மன், தொட்டி ச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
இன்று (மே 26) மாலை 4:15 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. இரவு 7:30 மணிக்கு எந்திர ஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பிரசாதம் வழங் குதல்நடக்கிறது. நாளை (மே 27)ல் காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, சூர்ய பூஜை, தனபூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, பூர்ணாகுதி, யாத்திரா தானம், கடம் புறப்பாடு, காலை 10:30 முதல் 11:15 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.