பதிவு செய்த நாள்
26
மே
2018
03:05
புதுமாவிலங்கை: புதுமாவிலங்கை கெங்காதரீஸ்வரர் கோவிலில், (மே 25ல்) நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது.கடம்பத்தூர் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சியில் அமைந்து ள்ள காமாட்சி அம்மன் சமேத கெங்காதரீஸ்வரர் கோவிலில், நேற்று (மே 25ல்) மகா கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக, 20ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. அன்று, மாலை, 6:00 மணிக்கு, மிருத்சங்கிரஹணம் நடந்தது. அதன் பின், மறுநாள், 21ம் தேதி, 9:00 மணிக்கு நவக்கிரக ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியும், மாலை, 6:00 மணிக்கு, பிரவேச பலி மற்றும் வாஸ்து சாந்தியும் நடந்தது.
தொடர்ந்து, 22ம் தேதி, தன பூஜை, மற்றும் கோ பூஜையும், 23ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, யாகாலங்காரம், மாலை, 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையும் நடந்தது.
(மே 24)ல் நேற்று முன்தினம், காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜையும், விசேஷ திரவிய ஹோமமும் நடந்தது.
மகா கும்பாபிஷேக நாளான நேற்று (மே 25)ல், காலை, 6:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை, 8:15 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் நடந்தது.
அதன் பின், காலை, 9:00 மணிக்கு, சுந்தர விநாயகருக்கு கும்பாபிஷேகமும், காலை, 9:45 மணிக்கு, காமாட்சியம்பாள் சமேத கெங்காதரீஸ்வரர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகமும் அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது.
பின், பகல் 2:30 மணிக்கு, மகா அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவ மும், அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் சுவாமி திருவிழா உலாவும் நடந்தது.