பதிவு செய்த நாள்
26
மே
2018
03:05
செங்கம்: செங்கம், பெருமாள் கோவிலில் கருட சேவை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி யது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவி லில், 10 நாள் கருடசேவை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (மே 25)ல் தொடங்கியது.
வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பின்னர், கொடி மரத்தின் முன்பு, உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, கோவில்பட்டாச் சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடந்தது.
இதை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று இரவு திருக்கல்யாணம், அனுமந்த வாகனத்தில் வீதியுலா, நாளை (மே 27)ல் நாக வானத்தில் வீதியுலா, 28ல், அதிகாலை கோபுர தரிசனம் நிகழ்ச்சி, மகா கருட சேவை, 29ல், யானை வாகனத்தில் வீதி உலா, 30ல், தேர்த் திருவிழா நடக்க உள்ளது.