பதிவு செய்த நாள்
28
மே
2018
03:05
ஓசூர்: ஓசூரில் உள்ள, கருமாரியம்மன் கோவில் மண்டல பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூரில் உள்ள, ராயக்கோட்டை சாலை, பாரதியார் நகரில், தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபி?ஷக விழா, கடந்த, 8ல் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9:00 மணிக்கு, சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை, கணபதி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, பூர்ணாஹூதி, கலச அபி?ஷகம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.